• Inner Slider

 

 trainoil

 

புகையிரத சேவையினூடாக எண்ணெய்க்கிடங்குகளுக்கு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மத்திய மாகாண காரியாலயத்திற்கு நேற்று மேற்கொண்ட திடீர் விஜயத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
மசகு எண்ணெய்யினை பவுசர்களின் மூலம் விநியோகிக்கப்படுவதை விட புகையிரத சேவையினூடாக விநியோகிப்பதன் மூலம் இலாபத்தை ஈட்டமுடியும். மேலும் எதிர்கால நலனுக்காக எண்ணெய் கிடங்குகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்ட பணியாக கண்டி-பேராதெனியவில் உள்ள எண்ணைக் கிடங்குகள் மற்றும் களஞ்சிய சாலை என்பவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விநியோகத்தை பவுசர்களில் இல்லாமல் புகையிரதத்தினுடாக மத்திய மாகாணத்திற்கு கொண்டுவந்தால் எமது கூட்டுத்தாபனத்துக்கு பெரும் இலபம் கிடைக்கும். பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இலாபம் மீட்டும் வழிகளை கண்டறிவதற்கும்தான் நான் இந்த அமைச்சை பொறுப்பேற்றேன்.
நாங்கள் பொதுமக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கி வருகின்றோம். இலபமீட்டும் வழியாக கூட்டுத்தாபனத்தின் செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நான் துறைமுகத்தில் 2 வருடங்கள் இருந்த போது 11 பில்லியன் இலாபத்தை பெற்றுக்கொடுத்தேன். அதற்கு காரணம் அநாவசிய செலவுகளை கூடியஅளவில் குறைத்துக்கொண்டமையாகும்.
அதுபோலவே இங்கும் இடம்பெறும். ஆனால் ஊழியர்களின் கொடுப்பனவுகளில் எவ்விதப்பாதிப்பும் ஏற்படாது. உண்மையில் இந்த நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு ஊழியர்களிடமே உள்ளது. அதனால் அனைவரும் ஒன்றினைந்து வேலைசெய்யவேண்டிய தேவையுள்ளது என்றார்.

அமைச்சின் கீழ் நிறுவனங்கள்

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)

cpcஇலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது.

 

இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையம் மட்டுமே (CPSTL)

cpstlCPSTL பெட்ரோலிய பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகம் பொறுப்பு.

 

 

பெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்

ஒரு , பாரபட்சமில்லாத பாதுகாப்பான மற்றும் சூழல் முறையில் தொழில் மேலாண்மை மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டின் பெட்ரோலிய வளங்களை நன்மை என்று உறுதி