logo

inner slider

 

deputy filஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 1961ஆம் ஆண்டு, 28ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் அரச கூட்டுத்தாபனமாக ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் பிரதான நோக்கங்கள், வியாபார முன்னெடுப்பில் இறக்குமதியாளராகவும், ஏற்றுமதியாளராகவும், விற்பனையாளராகவும், விநியோகஸ்தராகவும் மற்றும் பெற்றோலிய பொருட்களை விற்பனைசெய்யும் முகவர்களாகவும் ஈடுபடுவதாகும்.

மேற்குறித்த விடயப்பரப்பில் பெற்றோலிய உற்பத்தி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளல், உற்பத்தி செய்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கான ஆய்வுகளை மேற்கொள்வதோடு நோக்கங்களை அடைவதற்கு ஏற்புடையதாகவோ அல்லது உகந்ததாக எந்தவொரு வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகும்.

மேற்குறித்த நோக்கங்களை அடைவதற்குறிய வழிகளை அடைவதற்கு பெற்றோலியம் வளத்துறை மற்றும் அபிவிருத்தி பிரதி அமைச்சர் என்ற வகையில் நான் எனது செய்தியை கூறுவதற்கு விளைகின்றேன்.

அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை மூலமாக கனவுகளை அடைந்துகொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

இதை முன்னெடுக்க உண்மையான அர்ப்பணிப்பு, சுறுசுறுப்பு மற்றும் பேரார்வம் கொண்ட ஆற்றல் உள்ள மக்கள் தேவை. நிறுவனத்தினுடைய வெற்றிக்கு மனித வளம் மற்றும் சிறந்த முகாமைத்துவம் என்பன மிக முக்கியமானவையாகும்.

நிறுவனத்தின் வெற்றிக்கு பெற்றுக்கொண்ட கல்வித் தகைமைசார் சான்றிதழ்கள் முக்கியமானது என்றாலும் துறைசார் (அனுபவ ரீதியாக பெற்ற அறிவு) விஷேடமானது என கூறுகிறேன்.

எங்களது இலக்குகள் இலட்சியமானவை, எங்களுக்கு முன்னிருப்பவை சவாலானவை. எவ்வாறெனினும் நாம்; எமது நோக்கங்களை நிறைவுசெய்ய உறுதியோடு உள்ளோம்.
நாம் தேர்ந்தெடுத்த மூலோபாயத்தை நம்புகிறோம் ஏனென்றால் இப்போது நாம் நல்ல ஆட்சி பாதையில் சரியான வழியை நோக்கி செல்லுகின்றோம்.

முடிவாக, நான் விரும்புவது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நீங்கள் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஆதரவையும் தரவேண்டும் என்பதேயாகும். எமது குறிக்கோளை அடைய, ‘வாடிக்கையாளர்களுக்கு முதல்தர சேவையை வழங்குதல், சூழலுக்கு நண்பனாக இருத்தல் மற்றும் பிராந்தியத்தில் முதன்மையிடத்தைப் பெறுவதோடு நாட்டின் செழிப்புக்கு பங்களிப்புச் செய்வதாகும்;’ இதுவே எமது மக்களின் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதாக அமையும் என நம்புகின்றேன்.

 

 

டாக்டர். அனோமா கமகே
பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 157.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 130.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்