• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

chairman

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெறும் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் பூர்த்தியான பின் 3 இருந்து 4 வீதம் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் இதனை Daily FT பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

'நாட்டின் சக்தி வள தேவைக்கமைய நாளோன்றுக்கான குறைந்தபட்சம் 100 இலட்சம் மசகு எண்ணெயை சுத்திகரிப்பதற்கான எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை எண்ணை சுத்திகரிப்ப இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெறும். இதில் சுத்திகரிப்பு இயந்திரம், எரிபொருள் குழாய்கள் மற்றும் எரிபொருள் களஞ்சிய டாங்கிகள் ஆகியன சுத்தம் மற்றும் புனரைமைப்பு செய்யப்படும். இந்த நடவடிக்கை காரணமான எமது எரிபொருள் உற்பத்தியை நூற்றுக்கு 3 இருந்து 4 வரையான வீதம் அதிகரிக்க முடியும். இதனால் கிடைக்கும் இலாபம் எமது நாட்டு மக்களுக்கே சென்றடையும். குறிப்பாக 2012 ஆண்டு பெரல் 70,000 சுத்திகரிப்பதன் மூலம் மாதத்திற்கு அமெரிக்க டொலர் மில்லியன் 400 சேமிக்கப்பட்டது. அதாவது ஒரு நாளுக்கு பெரல் 1,00,000  உற்பத்தியில் அமெரிக்க டொலர் மில்லியன் 400 இருந்து 450 வரை சேமிக்க முடிந்தது. இது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்வதில் கிடைக்கும் இலாபத்தைவிட மேலதிகமாகும். மேலும் எந்தவகையான மசகு எண்ணெய்யையும் சுத்திகரிக்க முடியும். இந்த உற்பத்தியானது மேற்கு மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தி தரத்திற்கு சமமாக காணப்படும். ஆனால் நாங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் எண்ணமில்லை. மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இயங்கவே எமது எதிர்கால எண்ணமாகும்'என்றார்.

http://www.petroleummin.gov.lk/web/index.php/en/news/138-test-4

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

 

 

 

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்