• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

srilankan4

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தினால் நாடு பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றபோதும் இவ்விடயத்துக்கு தீர்க்கமானதொரு தீர்வு தேவை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதிலும் பார்க்க பேச்சுவாத்தை மூலம் இதற்கு தீர்வு காண்பதற்கு ஆகக்கூடிய முயற்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு மிகப்பெரிய நிதியை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இந்நிதியை மீளப்பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வந்தது. இதன்போது நிலுவையை திருப்பிச் செலுத்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும் இதுவரை எந்த உடன்பாட்டு படி நிலுவை கிடைக்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் எவ்விதா தீர்வும் கிடைக்காவிட்டால் அமைச்சரவைக்கே இது பற்றி அறிவிக்க வேண்டுமென்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அரச நிறுவனம் என்பதனால் இதனை பாதுகாக்கும் பொறுப்பும் காணப்படுகின்றது என்றார்.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்