• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

srilankanசிறிலங்கா எயார்லைன்ஸ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மிகப்பெரிய நிதியை நிலுவையாக செலுத்த வேண்டியிருந்தது. இந்நிதியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. 
இந்நிலையில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. நீல் ஜயசேகர அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் அரச தொழில் முயற்ச்;சி அமைச்சின் செயலாளர் ரன்ஜித் ஹேவாவிதாரன, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க மற்றும் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ராஜித பெனன்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.
சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 13.45 பில்லியன் கடன் நிலுவையில் முதற்கட்டமாக ரூபா 800 மில்லியனை வழங்க தீர்மானித்துள்ளது. மீகுதிப் பணத் தொகையை செலுத்துவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைபெற்று தனியார் வங்கியில் கடன்பெறமுயற்சிக்கவுள்ளது. இதேநேரம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது தொடர்ந்து சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு.
 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 129.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்