• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

euro4min

எமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, எமது சுற்றுச் சூழலுக்கு மாசு எற்படுத்தாத சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யூரோ-04 பெற்றோல், சுப்பர் டீசல் என்பன அறிமுகப்படுத்தப்பட்டதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கொழுப்பு-02 சேர் சிற்றம்பலம் கார்டினல் மாவத்தையில் அமைந்துள்ள சி.எப்.டி மெல் எண்ணெய் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'கடந்த காலங்களில் நாட்டிற்குள் தரமற்ற எரிபொருளே கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான எண்ணெய் வகைகளை நாட்டிற்குள் கொண்டுவருவதை தடுத்து நிறுத்தினோன். இது குறித்து எமக்கு பலவிதமான விமர்சனங்களும் ஏற்பட்டன. எவ்வாரெனினும் எமது சூழலை பெற்றோல் மற்றும் பெற்றோலிய பொருட்களினால் எவ்வித பாதிப்பும் எற்படாமல் பாதுகாக்க வேண்டும். வாகன புகையினால் சூழல் மாசடைவதை தடுக்கவே இந்த உயர் தரத்திலான யூரோ-04 எரிபொருள் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் விநியோகம் நாடு முழுவதற்கும் கூடிய விரைவில் விஸ்தரிக்கப்படும். நாட்டின் அபிவிருத்தியில் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக ரணதுங்க அவர்கள், யூரோ 04 எணணெய் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முழுநாட்டிற்கும் இது விஸ்தரிக்கப்படும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எண்ணெய்யே இன்றைய தேவையாகும். ஐரோப்பிய சூழலுக்கு எற்றது போல எமது சூழலுக்கும் இது நன்மையை உருவாக்கும். வாகனப் புகையானது சூழலுக்கு மட்டுமல்லாது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் பாதிப்பை எற்படுத்தும். இவற்றை கருத்திற்கொண்டு நாம் இன்று யூரோ- 04 எரிபொருளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகே மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 
 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்