• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

parlimentmin

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மண்ணெண்ணை ஒரு லீட்டருக்கு ரூபா 23.89 நட்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று 2018-07-18 ஆம் திகதி பகல் இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மைத்திரி ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கே பெற்றோலிய வளங்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'விலை அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை மீனவர்களின் கேரிக்கையினால் ரூபா 70 ஆக குறைத்தோம். ஆனால் எமக்கு தற்போதும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு ரூபா 93.89 ஓதுக்கவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் நட்டத்திலேயே ஒரு லீட்டரை ரூபா 70 விற்கு விநியோகிக்கின்றோம்...' என்றார்.

அமைச்சர் மேலும் விலைசூத்திரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

' எரிபொருள் சூத்திரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் அது பற்றி அறிவிக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் சூத்திரம் திறைசேரியினால் தீர்மானிக்கப்படும். நாம் உலக சந்தையில் எரிபொருள் விலை உயரும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கவும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை குறையும் வகையில் எரிபொருள் சூத்திரத்தை வடிவமைத்துள்ளோம். நாம் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் அதற்கான குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழுவால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைவாகவே விலையின் ஏற்ற இறக்கம் தொடர்பாக தீர்மானிக்கப்படும்..' என்றார் அமைச்சர்.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 157.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 130.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்