• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

Aru 60

தவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் - அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

தவறானவர்களுடன் இருந்தால் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு உபாலி மாரசிங்க அவர்களின் 'சமர்ப்பிக்கும் திறன்கள்' மற்றும்; 'பயனுள்ள அரசாங்க நிறுவனங்கள்' என்ற இரண்டு நூல்களை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'விளையாடும் காலத்தில் நான் அணித் தலைவனாக இருந்தேன். ஒருவரை தலைவராக்க நிறையபேர் பாடுபட்டனர். நாங்களும் கஷ்டப்பட்டு தலைவர்களை உருவாக்கினோம். ஆனால் அந்த தலைவர்களின் பெயர்கள் இன்று கெடுவதற்கு காரணம் கடந்த காலத்தில் களவு சூது செய்த நபர்களினால். அங்குதான் தலைவர்களின் நிலை கீழ் செல்கின்றது. அந்த நிலையை எம்மால் பார்க்கமுடிகிறது. அமைச்சர் என்ற வகையில் நாங்களும் தவறான நபர்களை எம்மிடையே வைத்திருந்தால் எமது மேல் நிலை இல்லாமல் போய்விடும். கஷ்டப்பட்டு நாம் தலைவர்களை உருவாக்கினாலும் அதற்காக பாடுபட்டவர்கள் அந்தத் தலைவர்களை அழிப்பதில்லை. கஷ்டப்பட்டு நாங்கள் தலைவர்களை உருவாக்கி நல்ல நிலைக்கு கொண்டுவந்தாலும் கள்ள சூது கொண்ட நபர்களினால் அந்த தலைவர்களை அழித்துவிடுகின்றனர். எனது செயலாளர் உபாலி மாரசிங்க அவர்கள் சொன்னார் பெப்ரவரி மாதம் தான் ஓய்வு பெறபோவதாக. அதுவரை அவரும் நானும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்' என்றார் அமைச்சர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அரச நிறுவனம் தனியார் மயமாகுவதற்கு காரணம் அரச நிறுவனத்தில் இருப்பவர்களின் திறமையற்ற தன்மையினாலேயாகும். அரச நிர்வாகத்தில் அரச அதிகாரி திர்மானங்களை எடுக்க தயங்கக்கூடாது. நாங்கள் நாடு என்ற ரீதியில் தீர்மானிக்கும் போது அது ஒருபோது தவறாது. அரச நிறுவனங்களில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அரசியல் அலுத்தங்களால் தற்போது பின்னடைந்துள்ளது. சில அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். ஆனாலும் நாங்கள் அது பற்றி குறைகூறமுடியாது. ஆனாலும் மறுபக்கத்தில் பார்த்தால் கடந்த காலத்தில் சொன்னதை செய்யாவிட்டால் அதன் பிறகு அவர் தமது பதவியில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்படும். தற்போது அதை நாங்கள் மாற்றியுள்ளோம்.....' என்றார் அமைச்சர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜயாதிபதியின் செயலாளர் திரு ஒஸ்டின் பெனாண்டோ, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் அனோமா கமகே மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திரு மத்தும பண்டார அவர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aru 40

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்