• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

scholar

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் ஊழியர்களின் பல்கலைக்கழகம் அனுமதிபெற்ற மாணவர்களுக்கு கூட்டுத்தாபனத்தினால் புலமைபரிசில் வழங்கப்படவுள்ளது.

 இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் நாளை காலை 10 மணியளவில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

 இந்நிகழ்வுக்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் திரு. உபாலி மாறசிங்க, கூட்டுத்தாபனத் தலைவர் திரு. தம்மிக்க ரணதுங்க மற்றும் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வு 1982 ஆம் ஆண்டு தலா 5000 ரூபா வழங்குவதில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வருடத்திற்கு 60000 ரூபாவாக வழங்கப்படுகின்றது. இதில் 30000 என்ற ரீதியில் இரண்டு கட்டங்காளக பிரித்து வழங்கப்படவுள்ளது.

 2016/2017 ஆம் ஆண்டு பல்கலைகழகத்துக்கு தெரிவான 25 மாணவர்களுக்கு இந்த புலமைபரிசில் வழங்கப்படவுள்ளது. வைத்திய பிரிவில் 03, பொறியியல் பிரிவில் 03, விஞ்ஞான பிரிவில் 10, தகவல் தொழில் நூட்பப்பிரிவில் 03, முகாமைத்துவ பிரிவில் 04 மற்றும் கலை பிரிவில் 02 மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

 

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்