• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

schlors

பெற்றோலி கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூட்டுத்தாபனத்தில் வேலைபார்க்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களில் இவ்வாண்டு பல்கலைகழகம் செல்ல அனுமதி பெற்ற மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கும் இந்நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாம் எல்லோரும் பொதுமக்கள் பணத்திலேயே கல்வியை கற்றோம். அமைச்சர் என்ற ரீதியில் எனது சம்பளமும் பொதுமக்கள் பணத்தில் இருந்தே தரப்படுகின்றது. ஆகவே எமக்கு பொறுப்புள்ளது இந்த கடனை நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பது. இந்த சிந்தனை நம் எல்லொரிடத்திலும் இருந்தால் எமது நாடு இலகுவாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும். ஆனால் துரதிஷ்டவசமாக மக்கள் அவர்களது வளங்களையும் உழைப்பையும் விற்கின்றனர்.

இங்குள்ள பெற்றோர்களின் கடின உழைப்பினாலேயே இந்த கூட்டுத்தாபனம் முன்னோக்கிச் செல்கின்றது. மற்றைய நாடுகளில் செலவீனம் காரணமாக விரைவாகவே நிறுவனத்தை தனியார் மயப்படுத்திவிடுகிறார்கள். எம்மில் சிலர் நினைக்கின்றனர் எமது நாட்டுக்கும் இதுவே சிறந்த முடிவு என்று. இந்த சிந்தனையானது தனியார் மயமாக்கலுக்கு வழிசமைக்கும் என்றார்' அமைச்சர்.

இந்த நிகழ்வானது 1982 ஆம் ஆண்டு தலா 5000 ரூபா வழங்குவதில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வருடத்திற்கு 60000 ரூபாவாக வழங்கப்படுகின்றது. இதில் 30000 என்ற ரீதியில் இரண்டு கட்டங்காளக பிரித்து வழங்கப்படவுள்ளது.

2016ஃ2017 ஆம் ஆண்டு பல்கலைகழகத்துக்கு தெரிவான 25 மாணவர்களுக்கு இந்த புலமைபரிசில் வழங்கப்படவுள்ளது. வைத்திய பிரிவில் 03, பொறியியல் பிரிவில் 03, விஞ்ஞான பிரிவில் 10, தகவல் தொழில் நூட்பப்பிரிவில் 03, முகாமைத்துவ பிரிவில் 04 மற்றும் கலை பிரிவில் 02 மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிகழ்வுக்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் திரு உபாலி மாறசிங்க, கூட்டுத்தாபனத் தலைவர் திரு. தம்மிக்க ரணதுங்க மற்றும் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்