• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

7

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை பிரதேசத்திற்கு செல்லும் எரிபொருள் குழாயை அண்மித்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக அப்பிரதேசத்தை சேர்ந்த முதல் 20 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் இன்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இப்பிரதேசத்தில் எரிபொருளை கொண்டு செல்வதற்கு புதிய குழாயை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

'இப்பிரதேச வாசிகளை அப்பிரதேசத்தில் இருந்து அகற்ற முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்னினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் செயல்படுவதனால் அப்பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். அதன் முதற்கட்டமாகவே முதல் 20 குடும்பங்களுக்கு நாம் இன்று புதிய வீடுகளை வழங்கியுள்ளோம். ஏனையோர்களுக்கும் கட்டாயமாக வீடுகள் வழங்கப்படும்.

நீங்கள் அனைவரும் அந்த எரிபொருள் குழாயின் மேலேயே வாழ்ந்து வந்துள்ளீர்கள். நீங்கள் நெருப்பின் மேல் வாழ்ந்துள்ளீர்கள். அந்த குழாயில் தீப்பற்றி எரிந்தால் கொழும்பு நகரமே நாசமாகிவிடும். உங்கள் அனைவரையும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வெளியேற்ற முடியும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதுபோல பல சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம் பெற்றது. அவர்கள் ஒர் இரவிலேயே உங்களை வெளியேற்றியிருப்பார்கள். ஆனால் எமது நல்லாட்சி அரசாங்கம் அதை செய்யவில்லை. நாங்கள் அதற்கு பதிலாக புதிய வீடுகளை வழங்க ஏற்பாடு செய்தோம். அதன் முதற் கட்டப் பணியே இந்த நிகழ்வாகும்' என்றார் அமைச்சர்.

 மேலும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருநானாயக அவர்கள் தெரிவிக்கையில்,

'இந்த எரிபொருள் குழாய் 70 ஆண்டுகள் பழமையானது. எம்மால் கூறமுடியாது இது எப்போது உடைந்து போகும் என்று. நாங்கள் கடந்த 20 ஆண்டுகளில் எந்த வித புது குழாயையும் இனைக்கவில்லை. ஆனால் தற்போது புதிய குழாயை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டமானது பிரதேசவாசிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தே முன்னெடுக்கப்படுகின்றது' என்றார்

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்