• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

CPC and Upali Marasinghaமண்ணெண்ணெய் மொத்தமாக விற்பனை செய்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக, பெற்றோலிய வள nபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வாகனங்கள், தொழிற்சாலைகள், பவுசர்கள் மற்றும் மொத்த விலைக்கு மண்ணெண்ணெய்யை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருவகையான மண்ணெண்ணெய்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. அவற்றில் இலங்கை மண்ணெண்ணெய் என்பது சிவப்பு நிறத்திலானது.

இது, சாதாரண பாவனைக்காக அரசாங்கத்தின் மானியத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் மீனவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகும். இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், அதிக இலாபம் பெறும் நோக்குடன், தெழிற்சாலைகளுக்கும் இலங்கை மண்ணெண்ணெய்யை விற்று வருவதோடு, பஸ் மற்றும் பவுசர்களில் அனுப்பியும் வருவதாக அமைச்சு தெரிவித்தது. இது தவிர டீசலகளில் மண்ணெண்ணெய் கலந்து விற்கும் மோசடியும் நடப்பதோடு மண்ணெண்ணெய் பாவனை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை மீறி எரிபொருள் விநியோகஸ்தர்கள் செயற்பட்டால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவர்களின் எரிபொருள் விநியோக உரிமைப்பத்திரம் தடைசெய்யப்படும். சுற்றறிக்கைக்கமைவாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள் கட்டாயம் மண்ணெண்ணெய்யை தொழிற்சாலைகளுக்கும் வியாபார நோக்கங்களுக்கு மட்டுமே விநியோகிக் வேண்டும். டீசலில் மண்ணெண்ணெய் விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்