• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

Flight and CPCவிமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத் திட்டம் விரைவில் செயற்படுத்தப்படும். புதிய திட்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் 3.1 அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இதில் ஒரு கட்டமாக விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத்திட்டம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்கவின் தலைமையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தில் புதிய விமான தளங்களை உருவாக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. இதில் விமான நிலையத்திலேயே புதிய விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறிப்பிடுகையில், நாங்கள் 2013ஆம் ஆண்டு யோசனைக்கமைய ஒப்பந்தம் செய்திருந்தால் மிகப்பெரிய நட்டம் நாட்டுக்கும் கூட்டுத்தாபனத்திற்கும் ஏற்பட்டிருந்திருக்கும். குறிப்பாக முதற்கட்ட திட்டத்தின் படி கூட்டுத்தாபனத்திற்கு 74.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால கடனாக இருந்திருக்கும், தற்போது சரியான ஒப்பந்தகாரர்களை தேர்வு செய்தமையால் எமக்கு 71.1 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது. இதனால் 3 மில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடிந்துள்ளது.
இந்த திட்டம் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் எங்கள் கடின உழைப்பால் சில காலங்களுக்குள்ளே இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது. சில அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதப்பட்டிருந்தன.

ஆனால், எமது அமைச்சரின் ஆலொசனைக்கமைய அவற்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டங்ளின் மூலம் எம்மால் நாட்டின் சக்தி வளப்பாதுகாப்பையும் சிறந்த சேவையையும் வழங்க முடியும் என நம்புகின்றோம். நாங்கள் சில இலக்குகளையும் தற்போது அடைந்துள்ளோம். மேலும் இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் ஆசியா வலயத்தில் தரமான எரிபொருளை விமானங்களுக்கு விநியோகிக்க முடியுமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்