• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

07பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை (14) வரை நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க போராட்டங்களை பிட்போட்டுள்ளது. ஒன்றினைந்த தெழிற்சங்கங்கள் (07) இன்று மதியம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவாத்தையின் பின்பே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

திருகோணமலை எண்ணைத்தாங்கிகளை இந்திய நிறுவனங்களுக்கு கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை கைவிடும்படியான கோரிக்கையை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விடுத்துள்ள நிலையில் இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை முன்வைத்தே இந்த தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.

ஆயினும் இன்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் கூறுகையில்

'நீங்கள் கொடுத்த கோரிக்கையை நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமுமம் கையளித்துள்ளேன். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவாக நடப்பதற்கன ஏற்பாடுகளையும் மேற்கொள்ள கூறியுள்ளேன். இதன்போது அவர்கள் நாட்டில் உள்ள டெங்கு பிரச்சினை தொடர்பாகவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதால் இன்னோரு நேரம் ஒதிக்கித்தரப்படும் என்றனர். ஆகவே பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒருவாரகால அவகாசத்தை தருமாறு நான் உங்களிடம் கோருகின்றேன். அடுத்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு நான் பேச்சுவார்த்தைக்கான நேரத்தை எடுத்து தருகின்றேன். வருகிற வெள்ளிக்கிழமைக்கு நான் முயற்சிப்பேன். காரணம் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இருந்து இந்தப் பேச்சுவார்த்தை நாடத்தப்படவேண்டியது மிகவும் அவசியம். எனது தீர்மானம் அரசின் தீர்மானமாக இருக்காது. எனக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை உங்களுடைய பிரச்சினையாகும் உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதே. நானும் பேச்சுவார்த்தையை பிற்போடுவதை விரும்பவில்லை. ஆனாலும் முதலீட்டாளர்கள் எமக்கு சாதகமாகவும் நாடு அபிவிருத்தியடையவும் வழியமைத்தால் அதையும் நாம் பார்க்கவேண்டும். இந்த வேண்டுகோளையும் முதலில் உங்களிடம் விடுக்கின்றேன்.' என்றார்.

இந்த வேண்டுகோளை செவிமடுத்திய பெற்றோலிய தொழிற்சங்கங்க உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் டி.பெ. ராஜகருணா அவர்கள் தமது கருததை தெரிவிக்கையில்,

'நாங்கள் தனிப்பட்ட கோரிக்கையோ சம்பள அதிகரிப்பையோ முன்வைக்கவில்லை நாட்டு நலன் என்ற வகையில் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன். நாங்கள் வைத்த கோரிக்கையில் உள்ளது இது முழுமையாக நாட்டின் நலனைப் பற்றியென்பதே. ஆகவே எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றால் நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம் இந்த அரசாங்கத்துக்கு. ஆனால் மற்றுப்பக்கம் சில அச்சமும் உண்டு. அரசாங்கம் எங்களோடு செல்கிறதா இல்லையா என்பதே? 05 ஆம் மாதம் 26 ஆம் திகதி எங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது. ஆனால் இப்போது ஒரு மாதம் கடந்துவிட்டது. இதனால் இந்த மாத இறுதிக்குள் திருகோணமலை தொடர்பாக அரசாங்கம் இறுதிமுடிவு எடுக்கவேண்டும். இதனால் காலாமதம் ஏற்படுத்தும் தொடர்பான சந்தேகம் இல்லாது போய்விடும். ஆனால் அமைச்சர் அவர்களே உங்களுடைய கருத்துக்கு நாங்கள் இனங்குகின்றோம். இந்த நிலைப்பாடு ஓருவாரகாலத்துக்கு மட்டுமே. எமக்கு தெளிவான சந்தேகமே உண்டு எங்களை அரசாங்கம் ஏமாற்றிவிடுமோ என்று. நாட்டுக்காக நாங்கள் ஏமாற்றமடைய தயாரில்லை. கடைசி நிiலைக்கும் நாங்கள் செல்லத் தயாராகவுள்ளோம் என்றார்.

 

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்