• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

08கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையில் 17 ஆண்டுகளுக்குப்பின் விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று மாத காலப் பகுதியில் நிறைவுசெய்யப்பட்டு நேற்று(25)பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அதனை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வு கொலன்னாவை விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் களங்சியசாலைப் பிரிவில் இடம்பெற்றது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் வழிகாட்டல் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக ரணதுங்க தலைமையின் கீழ் இந்த புதிய சுத்திகரிப்பு இயந்திரத்தை குறகிய காலப்பகுதிக்குள் அமைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங் கருத்து தெரிவிக்கையில்,

“2001ஆம் ஆண்டு கொலன்னாவை களஞ்சியசாலையில் இந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைப்பதற்கான எழுத்துமூல ஆவணம் நிறைவேற்றப்பட்டது எனினும் 2017ஆம் ஆண்டே இதனை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த திட்டத்தினால் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் 2 அல்லது 3 இலட்சம் அமெரிக்க டொலர் சேமிக்கலாம். மேலும் தற்போது அதிக போட்டித்தன்மையில் நாம் விமான எரிபொருளை விற்கவும் முடியும். இதனால் எமது நாட்டுக்கு பெரும் வருமானம் கிடைக்கும். இதேவேளை எமது விமானங்களுக்கான எரிபொருளின் தரம் மேலும் உயர்வடையும்” என்று பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்தார்.

 

88

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்