logo

inner slider

ministeroஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரனதுங்க அவர்கள் இன்று பாரளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் தினேஸ் குணவர்ந்த (பா.உ) அவர்களின் கேள்வியின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

“இந்த நிறுவனம் எங்கள் நாட்டினுடைய அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செலுத்தும் நிறுவனம். அத்தோடு தேசிய சக்தி வளங்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்புவாய்ந்த அமைப்பாக இந்நிறுவனம் காணப்படுகின்றது. நான் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் முழுநாட்டு மக்களுக்கும் பொறுப்பு காணப்படுகின்றது இந்நிறுவனத்தை பலமிக்க நிறுவனமாக மற்றுவது தொடர்பாக நான் உறுதியுடன் உள்ளேன்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் இருவரை எடுக்கப்படவில்லை. எமது நாட்டில் ஜனவரி 22, 2015 முதல் எரிபொருள் விலை பெரிதும் குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் இலக்கை அடைய முடிந்தது.

மேலும் விபரிக்கையில்,

“குறிப்பாக ஜனவரி 22, 2015தில் 92 என்ற பெட்ரோலின் விலையை ரூ.150தில் இருந்து ரூ. 117 ரூபாயாக குறைக்கப்பட்டது. ரூ.33 ஆக குறைக்க முடிந்தது. 95 என்ற பெட்ரோலின் விலையை ரூ.158தில் இருந்து ரூ. 128 ரூபாயாக குறைக்கப்பட்டது. ரூ.30 ஆக குறைக்க முடிந்தது.

ஓடோ டீசல் ரூ.111 இருந்து 95 ரூபாவாக குறைக்கப்பட்டு ரூ.16 வாக குறைக்கப்பட்டது.
சுபர் டீசல் ரூ. 133 இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டு ரூ. 23ஆக சேமிக்கப்பட்டது.
குறிப்பாக மண்ணெ;னை ரூ. 81 இருந்து 44க்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.37 சேமிக்கப்பட முடிந்தது.

இந்த விலைக்குறைப்பினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெறும் நட்டம் ஏற்பட்டதையும் நான் இங்கு தெரிவிக்கவேண்டும். ஆனாலும் சர்வதேச கச்சா எண்ணையின் விலை மற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்