• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

55கொழும்பு கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் பெற்றோலிய வளத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதியுடனே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 11,200மெட்ரிக் தொன் கொள்ளளவுள்ள 3 எண்ணெய் தாங்கிகளும், 11,900 மெட்ரிக் தொன் கொள்ளளவு விமான எரிபொருள் தாங்கியொன்றும், 11,600 மெட்ரிக் தொன் டீசல் தாங்கியொன்றும், 5,800மெட்ரிக் தொன் டீசல் தாங்கிகள் மூன்றும், மண்ணெண்னை தாங்கியொன்றும், 3,800 மெட்ரிக்தொன் டீசல் தாங்கியொன்றும் உருவக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், “ தற்போது ஒருமாதகாலம் மாத்திரமே எண்ணையை களஞ்சியசாலைகளில் வைத்திருக்கமுடியும் இத்திட்டத்தின் மூலம் 60 நாட்கள் எண்ணெயை இருப்பில் வைத்துக்கொள்ள முடியும். தற்போது நாட்டின் எரிபொருள் தேவை 90சதவீதம் அதிகரித்துள்ளமையாலேயே இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய எண்ணைத்தாங்கிகள் 40 வருடங்கள் பழமையானவையாகும். இதனால் 40 வடங்களுக்குப்பின் மீண்டும் புதிய எண்ணைத்தாங்கிகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருமலை எண்ணைத்தாங்கிகளையும் இந்தியாவுடன் சேர்ந்து சீரமைக்கும் பனிகள் விரைவில் நடைபெறும் என்றார்.

 

56

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்