• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

Minister plus CPCஅரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையாக எரிபொருள் விநியோக குழாய்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் விமானங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருளின் அவளவு விகிதம் அதிகரிக்கப்படும். தினமும் 1.6மில்லியன் லீற்றர் எரிபொருள் நிரப்பப்படுகின்றது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் 2021 ஆண்டு 2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விமானங்களுக்கு விநியோகிக்க முடியும். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்க முடியும்.

புதிய எரிபொருள் விநியோகக் குழாய் பாதைகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக அமையவுள்ளது. இவ்வழியினூடாக பொருத்தப்படவுள்ள எண்ணைக் குதங்களுக்கு எரிபொருளை நிரப்ப முடியும். இந்த புதிய எரிபொருள் விநியோகப் பாதையானது 20 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டது. முன்னைய அமைச்சரின் திட்டத்தில் இருந்த 23.6கிலோமீட்டர் தூரத்தை விட இது குறைவாகும்.

இந்த திட்டத்தின் மூலம் எமக்கு புகையிரதம் மற்றும் எண்ணை பவுஸர்களின் தேவைப்பாடு இல்லாமல் போகும். இதனால் எமது நிறுவனத்துக்கு 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதமாகும். இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் செலவீனங்கள் அனைத்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கையாளப்படவுள்ளது. இதனால் திறைசேரிக்கு எவ்வித சுமையும், பாதிப்பும் ஏற்படாது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

 

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்