inner slider

trainoilரயில் சேவையினூடாக எண்ணெய்க்கிடங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொளரவ பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மத்திய மாகாண காரியாலயத்துக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மசகு எண்ணையை பவுசர்களின் மூலம் விநியோகிக்கப்படுவதை விட ரயில் சேவையினூடாக விநியோகிக்கப்படுவதை விட ரயில் சேவையினூடாக விநியோகிக்கப்படுவதை விட ரயில் சேவையினூடாக விநியோகிப்பதன் மூலம் இலாபத்தை ஈட்டமுடியும். மேலும் எதிர்கால நலனுக்காக எண்ணெய் கிடங்குகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் முதற் கட்ட பணியாக, கண்டி-பேராதெனியவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் களஞ்சியசாலை என்பவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விநியோகத்தை பவுசர்களில் இல்லாமல் ரயிலினூடாக, மத்தி மாகாணத்துக்கு கொண்டுவந்தால் எமது கூட்டுத்தாபனத்துக்கு பெரும் இலாபம் கிடைக்கும். பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இலாபம் மீட்டும் வழிகளை கண்டறிவதற்கும்தான் நான் இந்த அமைச்சை பொறுப்பேற்றேன்.

நாங்கள், பொதுமக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கி வருகின்றோம். இலாபமீட்டும் வழியாக கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நான் துறைமுகத்தில் 2 வருடங்கள் இருந்த போது 11 பில்லியன் இலாபத்தை பெற்றுக்கொடுத்தேன். அதற்கு காரணம் அநாவசிய செலவுகளை கூடியஅளவில் குறைத்துக்கொண்டமையாகும்.

அது போலவே இங்கும் இடம்பெறும். ஆனால் ஊழியர்களின் கொடுப்பனவுகளில் எவ்விதப்பாதிப்பும் ஏற்படாது. உண்மையில் இந்த நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு ஊழியர்களிடமே உள்ளது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து வேலைசெய்யவேண்டிய தேவையுள்ளது” என்றார்.

 

ஊடகப்பிரிவு
அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்