logo

inner slider

நீலப்பச்சை அபிவிருத்தியின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் சந்தையில் யூரோ 04 தரத்திலான இலங்கை 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் இலங்கை சுபர் டீசல் என்பவற்றின் உற்பத்தியை அறிமுகப்படுதப்படவுள்ளது. 
 

euro4

2018ஆம் ஆண்டு நீலப்பச்சை வரவுசெலவு திட்டத்தின் யோசனைக்கு அமைவாகவே இந்த யூரோ 04 உயர் தரத்திலான எரிபொருள் வகையை எமது சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
யூரோ 04 என்பதானது ஜரோப்பிய ஒன்றியத்தினால் அங்கிகரிக்கப்பட்ட எரிபொருள் வகையாகும். இந்த தரத்திலான எரிபொருளையே ஜரோப்பிய ஒன்றியத்தில் காணப்படுகின்ற அனைத்து நாடுகளும் உபயோகித்து வருகின்றது. இதனை பயன்படுத்துவதால் வளிமாசடைதல் குறையும் மற்றும் சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. யூரோ 04 தரத்திலான எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்துவதானது வாகனத்தின் தரத்தினையும் அதன் இன்ஜுனின் தரத்தினையும் மேலும் உறுதிப்படுத்தும். 
 
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது எதிர்காலத்தில் இலங்கைக்கு யூரோ 04 தரத்திலான எரிபொருளையே இறக்குமதி செய்வதென்று. காரணம் தரமற்ற எரிபொருள் பாவனையினால் வாகனங்களில் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்கும் சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஆகும்.  
 
இலங்கை எரிபொருள் சந்தையில் இந்த யூரோ 04 எரிபொருளின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது சந்தையில் உள்ள ஒக்டேன் 95 பெற்றோல் ரூபா 148 மற்றும் இலங்கை சுபர் டீசல் ரூபா 119 ஆகிய விலையிலேயே யூரோ 04 தரத்திலான எரிபொருளை விற்பனை செய்யபடவுள்ளது. சாதாரன விலையில் விற்பனை செய்வதனால் ஏற்படும் நஷ்டத்தை கூட்டுத்தாபனமே பொறுப்பேற்கும். புதிய வகை எரிபொருளை அறிமுகப்படுத்துவதால் சந்தையில் காணப்படும் ஒக்டேன் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவை சந்தையில் இருந்து நீங்காது என்று பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை அவர் உயர் தரத்திலான எரிபொருளை பொதுமக்கள் பாவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கையில் யூரோ 04 எரிபொருளின் அறிமுகத்தால் எதிர்காலத்தில் இந்த எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக உயர், பாதுகாப்பான, வளிமாசடைதலை தடுத்தல் மற்றும் சுற்றாடலுக்கு எவ்வித பாதுப்பையும் ஏற்படுத்தா வாகனங்களை எதிர்காலத்தில் இறக்குமதி செய்யமுடியும்.
 
1992ஆம் ஆண்டு ஐரோப்பாவில் யூரோ 04 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எரிபொருள் சூழலை மாசுபாட்டை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டதாகவும் உயர் தரத்தினை கொண்டதாகவும் காணப்பட்டதால் இந்த எரிபொருளை ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கிகாரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 129.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்